கரூர்;
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கரூர் மாவட்டம், பள்ளபட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிவிட்டு அரவக்குறிச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

பள்ளபட்டியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் மோளையாண்டிப்பட்டி அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் அமைச்சர் காரின் பின்னால் வந்த போலீஸ் பாதுகாப்பு வாகனம் பைக் மீது மோதியத. இதில் பைக்கை ஓட்டிச்சென்ற குறிக்காரன்வலசை சேர்ந்த லட்சுமணன் (56) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: