கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அதிவேகமாக வந்த வேன் ஒன்று சாலையில் உள்ள  தடுப்பில் மோதி விபத்திற்குள்ளான காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நெடுஞ்சாலையில் காரை முந்த அதிவேகமாக வந்த  வேன் ஒன்று ஓவர்டேக் எடுத்திருக்கிறது.. அப்போது முன்னே சென்ற கார் திடீரென வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் வேனை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது ஏறி தாறுமாறாக ஓடத்துவங்கியது. இதனையடுத்து அந்த வேன் காரின் மீது மோதி சிறிது தூரம் சென்று நின்றது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: