புனே,

அசைவம் சாப்பிட்டால் தங்க பதக்கம் கிடையாது என்று புனே பல்கலைகழகம் அறிவித்திருப்பது அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அசைவம் உண்பவர்களை திட்டமிட்டு தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு செயல் பட்டு வருகிறது. மிருகவதை தடுப்புச் சட்டத் திருத்தத்தில் புதியதாக  2 சரத்துகளைச் சேர்த்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த மே 26ம் தேதி மோடி தலைமையிலான  பா.ஜ.க. அரசு வெளியிட்டது. இதன்படி, இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கத் தடை விதித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா,  மேற்கு வங்கம்  மேகாலயா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதைத்தொடர்ந்து நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சாவித்திரிபாய் பூலே பூனே  பல்கலைக்கழகம், தனது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தங்கப்பதக்கத்திற்கு விண்ணப்பிக்க புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘தங்க பதக்கம்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ‘தி குயின்ட்’ செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இச்செய்தி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

புனே பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவியும், சரத் பவாரின் மகளுமான எம்.பி. ஸ்ரீபிரியா படேல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,  இது அதிர்ச்சியாக உள்ளது. நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது… அப்படியென்றால் படித்து பெரும் மதிப்பெண் பற்றி? தயவு செய்து அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்விக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களை ஏன் பிளவு படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave A Reply