சென்னை:                                                                                                                                                                                பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.விருதுநகரை சேர்ந்த ஆரம்பத்தில் தனது உறவினர் மூலம் சினிமா ஆசையை நாகேந்திரன் என்ற ப்ரியன் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கினார்.

பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ‘மூன்றாம் பிறை’, ‘சந்தியராகம்’, ‘யாத்ரா’, ‘நீங்கள் கேட்டவை’ என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.ஒளிப்பதிவாளராக கமல் நடித்த தெனாலி படத்தில் தொடங்கிய ப்ரியன் அஜித், விஜய், என்று விரிந்து விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களின் முகபாவனைகளை மக்களுக்கு சிறந்த முறையில் பிரதிபலித்து காட்டியவர்.

ப்ரியனின் ஒளிப்பதிவை பார்த்து அசந்த இயக்குனர் ஹரி தான் இயக்கம் அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக ப்ரியனை முன்னிறுத்தி நட்பு வளர்த்து கொணடவர் .

கடுமையான உழைப்பாளியான ப்ரியன் ‘தொட்டாசிணுங்கி’, ‘பொற்காலம்’, ‘தேசியகீதம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘தெனாலி’, ‘ஸ்டார்’, ‘மஜ்னு’, ‘தமிழ்’, ‘பாலா’, ‘சாமி’, ‘கோவில்’, ‘அருள்’, ‘உதயா’, ‘ஐயா’, ‘ஆறு’, ‘வல்லவன்’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘வேல்’, ‘சேவல்’, ‘தோரணை’, ‘சிங்கம்’, ‘வேலாயுதம்’, ‘சிங்கம் 2’, ‘பூஜை’, ‘சிங்கம் 3’ என நீண்டு கொண்டே போகும்.தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘சாமி 2’ படத்துக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவாளராக உள்ளார்.வேங்கை படத்தை தவிர ஹரியின் அனைத்து படங்களிலும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ப்ரியன் எடுத்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்த படங்கள் தான்.ப்ரியனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: