இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து வேலூரில் ஜப்தி செய்யப்பட்டது.

வேலூரை அடுத்த பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார் (30), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல், வேலூர் அருகே அப்துல்லாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேலூரில் இருந்து பெங்களூரு சென்ற சேலம் கோட்டம், தருமபுரி மண்டல அரசு பேருந்து, இவர் மீது மோதியதில், நரேஷ்குமார் இறந்தார்.

இதுகுறித்து அவரின் தந்தை ரமேஷ் பாபு, (60), நஷ்டஈடு வழங்கக் கோரி வேலூர் மாவட்ட முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதையடுதது ரூ. 13, 3,800  வழங்கும்படி, தருமபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 2016 ல் நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை நஷ்டஈடு வழங்காததால், ரமேஷ்பாபு மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனால், ரமேஷ்பாபுவிற்கு வட்டியுடன் சேர்த்து, 18 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். தவறினால் அரசு பேருந்தை  ஜப்தி செய்யும்படி நீதிபதி தீர்ப்பளித்தார். நஷ்டஈடு வழங்காததால் தருமபுரியிலிருந்து வேலூர் நோக்கி வந்த தருமபுரி அரசு பேருந்தை  நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: