இரண்டாவது செங்கை புத்தகத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து செங்கை புத்தகத்திருவிழா என்ற பெயரில் புத்தக விற்பனை இயக்கத்தை நடத்தினர்.

இப்புத்தகத் திருவிழா செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற செங்கை புத்தகத் திருவிழாவில் பிரபல எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கங்கள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் விற்பனையானது.

இந்நிலையில் இரண்டாவது செங்கை புத்தகத் திருவிழா செங்கல்பட்டில் வரும் டிச. 3ஆம் தேதி ஏவிஎன் திருமண மகாலில் துவங்க உள்ளது. இத்திருவிழாவில் பிரபல பதிப்பகங்கள் கலந்து கொள்வதுடன் அரசு அலுவலர்கள், எழுத்தாளர்கள், ஒவ்வாரு நாளும் திரைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் சனிக்கிழமை (நவ 4) முனைவர் ப.கிள்ளிவளவன் தலைமையில் புத்தகத் திருவிழா தயாரிப்பு  கூட்டம் நடைபெற்றது.   தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரும் செங்கை புத்தகத் திருவிழாவின் செயலாளருமான ஆ.வீரன் வரவேற்றார். புத்தகத் திருவிழவின் ஆலோசகர்கள் லயன்.எம்.பி.வெங்கடப்பெருமாள், எஸ்.ஜனார்த்தனன், லயன்.எம்.எஸ்.முருகப்பா, துணைத் தலைவர் ஆர்.தனஞ்செயன், செங்கை பாரதியார் மன்ற நிர்வாகிகள் வே.கணபதி, க.அரி  உள்ளிட்ட பலர் புத்தகத் திருவிழா குறித்துப் பேசினர். புத்தகத் திருவிழாவின் நோக்கம் குறித்து மாற்று ஊடக மையத்தின் இயக்குநர் இரா.காளீஸ்வரன் பேசினார். புத்தகத் திருவிழா ஆலோசகர் ஜி.ஜோஸ்வாசாம் டேனி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: