தோகைமலை அருகே நெய்தலூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளியின் கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 1947 இல் கீற்றுக்கொட்டகையில் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட பழமை வாய்ந்த இந்தப் பள்ளி காமராஜர் காலத்தில் ஓட்டுக் கட்டிடமாக மாறியது. அதன் பிறகு 1993 ஆம் ஆண்டு ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு 22.1.1994 இல் முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

தற்போது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர்கள் பயின்று வருகின்றனர். அதன்பிறகு போதிய இடவசதிகள் இல்லாமல் மாணவ-மாணவியர்கள் தவித்து வந்ததால், அருகில் உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ளஅரசு மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள்செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இப்பகுதி சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையை அடுத்து இந்திரா நகரில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கூடத்துடன் கொண்ட பள்ளிக் கட்டிடம் தாட்கோ நிதி மூலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடக்கப் பள்ளிக் காக 1994 ல் திறக்கப்பட்ட இக்கட்டிடம் தற்போது பழுதாகி, கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் உள்ளனர். ஆனால் பழுதான கட்டிடம் அருகே மற்றொரு கட்டிடத்தில் மாணவ – மாணவியர்கள் பயின்று வருவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழுதான கட்டிடம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் வேறு இடம் இல்லாமல் பழுதான கட்டிடத்தை சுற்றி மாணவ- மாணவியர்கள் அமர்ந்து பயின்று வருகின்றனர்.

இதனால் இக்கட்டிடம் இடிந்து விழுந்தால் மாணவர்களுக்கு பெரும்ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பழுதான கட்டிடத்தை அகற்ற பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக் கின்றனர்.

மேலும் இட நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள் பழுதான கட்டிடத்தை அகற்றினால் இடநெருக்கடியும் குறையும் என்று தெரிவிக்கின்றனர். ஆகவே மாணவர் களின் நலன் கருதியும், மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆபத்தான நிலையில் உள்ள பழமை வாய்ந்த பழுதான கட்டிடத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: