திருப்பூர், நவ.7-
ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் ரமேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகி வாசுதேவன் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் திருவரங்கன், ஊரக வளர்ச்சி சங்க மாவட்டசெயலாளர் ஜான்ஆஸ்டின், வடிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகபெருமாள், செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பாஸ்கர் பாபு, மாவட்ட செயலாளர் சிவசங்கர், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.