சிம்லா;
இமாசலபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து, வியாழக்கிழமையன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.68 உறுப்பினர்களை கொண்ட இமாசலபிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கி 26-ஆம் தேதி வரை நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து, இமாச்சல பிரதேச மாநிலத்தில் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், இந்த பிரச்சாரம் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்ந்தது. நவம்பர் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.