மீரட்
கமலஹாசனை சுட்டுக் கொலை வேண்டும் அல்லது தூக்கிட வேண்டும் என்று என்று அகில இந்து மகா சபையின் துணை தலைவர் அபிஷேக் சர்மா மிரட்டல் விடுத்துள்ளார்.
அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டில் வெள்ளியன்று நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர்,   இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல வேண்டும்‘ என்றும் பேசினார். அவருடைய பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தொடரை விகடன் வார இதழில் நடிகர் கமல்ஹாசன் எழுதி வருகிறார். அதில்,  இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என கூறியிருந்தார். கமல்ஹாசனின் கருத்துக்கு பாஜக, சிவசேனையை சேர்ந்தவர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மிரட்டியும் வருகின்றனர்..
மேலும்,  கமலின் இந்த கருத்தை  கண்டித்து உ.பி., மாநிலம் பனராஸில் வக்கீல் ஒருவர் கமல் மீது புகார் செய்துள்ளார். இதை ஏற்று போலீசார் , இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட  ஐபிசி 500, 511, 298, 505 (சி), 295 (ஏ) ஆகிய 5  பிரிவுகளில் கமல்ஹாசன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகில பாரத  இந்து மகா சபா துணை தலைவர் பண்டிட் அசோக் சர்மா பேசும்போது  “கமல் ஹாசனும், அவரைப் போன்றவர்களையும் அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும்”, இதன் காரணமாக அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும்  இந்துமத நம்பிக்கை குறித்து தவறாக பேசும் எவரும் இந்த புனித நிலத்தில் வாழ உரிமை கிடையாது, தங்கள் கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் மிரடடியுள்ளார்.   நடிகர் கமலஹாசன்  நடித்த திரைப்படங்களை அனைவரும் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் கமலஹசன் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்படுத்த வேண்டும்,  இதை அனைத்து இந்துக்களும் கடைபிடிக்க வேண்டும்,. உண்மையில் அனைத்து இந்தியர்களும் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
‘இந்துக்கள் மற்றும் அவர்களின் மதத்தை அவமதிப்பவர்களை  மன்னித்து விடக் கூடாது” என மீரட் பகுதி இந்துமகா சபாவின் தலைவர்  அபிஷேக் அகர்வால் கூறினார்.
இந்து மகா சபா தலைவர்களின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: