சண்டிகர்,

அரியானா மாநிலம் குர்கானில் 224 நர்ஸிங் ஹோம்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக ஆர்.டி.ஐ.யில் தகவல் அளித்துள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த மகேந்திர குமார் என்பவர் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி குர்கானில் செயல்பட்டு வரும் போலி மருத்துவர்கள், சட்டவிரோத நர்ஸிங் ஹோம்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஹரியாணா சுகாதார துறையின் பொது அறுவை சிகிச்சை அலுவலகம், குர்கானில் 224 நர்சிங் ஹோம்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் இதுவரை அரசு சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியானா நர்சிங் ஹோம் சட்டப்படி அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என குர்கான் சுகாதாரத்துறை அதிகாரி பி.கே ராஜுரா, கூறியுள்ளார்.

இந்த 224 நர்சிங் ஹோம்களில் 141 போலி மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களிடம் மருத்துவம் பயின்றதற்கான உரிய சான்றிதழ்கள் ஏதும் இல்லை எனவும் ஆர்.டி.ஐ மூலம் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: