தில்லி,

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவை தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று மதத்தை குறிப்பிட்டு மதரீதியாக  கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியில் வெளியாக உள்ள பத்மாவதி திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று பாஜக கொக்கரிக்கத் துவங்கி உள்ளது.

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக் கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித் துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜனதா இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘பத்மாவதி’ படத்தை திரையிட தடை விதிக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.  சித்தூர்ராணி பத்மினியின் கதை ஏற்கனவே 1963-ம் ஆண்டு தமிழில் சிவாஜி கணேசன், வைஜெயந்தி மாலா நடிப்பில் திரைப்படமாக வெளியானது. சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கி இருந்தார்.

Leave A Reply