திருப்பூர், நவ.2 –
பேருந்து படியில் நின்று பயணம் செய்தவர் தவறி விழுந்து பலியானர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பழனிசாமி (44). இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லாலாப்பேட்டையில் நடந்த விபத்து காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் செவ்வாயன்று அரசு பேருந்து ஒன்றில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக படியில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படுகிறது.

அப்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பேருந்தில் இருந்து நழுவி திடீரென கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வடக்கு காவல்நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.