புதுதில்லி;
தீபாவளிப் பண்டிகையின் போது ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த நபர்களிடமிருந்து, மத்திய ரயில்வே சுமார் 11 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.இவை தவிர, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கடையில் நடத்தப்பட்ட சோதனையில், கள்ளச்சந்தையில் வாங்கப்பட்ட ரூ. 80,750 மதிப்புள்ள 21 டிக்கெட்டுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ரூ. 45,750 ரொக்கம், 58 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், கணினி சி.பி.யூ, ஹார்ட் டிஸ்க், ரசீதுப் புத்தகம் மற்றும் பிற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.