காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்காலத்தில் அவசர உதவிகோரி தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும். 13 வட்டங்கள். 633 ஊராட்சிகள். 17 பேருராட்சிகள். 9 நகராட்சிகள் ஆகிய பகுதிகளோடு சென்னை மாநகராட்சியின் 3 மண்டலங்களும் உள்ளடக்கியதாகும், இதில் ஏற்கனவே 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அளவுகோலாகக் கொண்டு மாவட்டம் முழுமைக்குமான வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய  பகுதிகளின் வரைபடம் வட்டம். பேருராட்சி மற்றும் நகராட்சியளவில் தயாரிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பேரிடர் காலங்களில் சுலபமாக தொடர்பு கொள்வதற்கு பின்வரும் எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி – அலைபேசி எண்கள்

கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1077, மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய எண்கள்     044-27237107. 044-27237207, வாட்ஸ் அப் எண்கள்     9445051077. 9445071077, கோட்ட அளவிலான தொடர்பு எண்கள் காஞ்சிபுரம் 9445164756, செங்கல்பட்டு 9790930878, தாம்பரம் 9962228549, மதுராந்தகம் 9444480048.

Leave A Reply

%d bloggers like this: