சென்னை;
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு சராசரியாக, 70 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடக்கும் நிலையில், மதுக்கடைகளில் ‘ஸ்வைப்’ இயந்திரங்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.அதனடிப்படையில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 50-க்கும் குறைவான, டாஸ்மாக் கடைகளில் டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாக, பணம் செலுத்தும், ‘ஸ்வைப்’ இயந்திரங்களை வழங்கியுள்ள தமிழக அரசு, விரைவில் அனைத்து மதுக்கடைகளுக்கும் ஸ்வைப் இயந்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: