சென்னை;
தமிழகத்தில் வருமானவரித் துறை நடத்திய ஆய்வில், எம்.டி.எம். குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் மற்றும் மத்திய – மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ. 39 கோடியே 91 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது.ஆனால், அதுதொடர்பான புகாரே வரவில்லை என்று தமிழக அரசு கூறிவிட்டது. இந்நிலையில், எம்.டி.எம். குட்கா நிறுவனம் ரூ. 9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் குட்கா சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது, அந்த நிறுவனம் செலுத்திய கலால் வரி மூலமே உறுதியாகி இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.