ஈரோடு, அக்.30-
52 வருடம் குடியிருத்த வீட்டை நெடுஞ்சாலைதுறையினர் அப்புறப்படுத்த முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு சூரம்பட்டி, பாரதி நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 52 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தண்ணீர் வரி, வீட்டு வரி மற்றும் மின்சார கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை வருவதாக கூறி அங்கு குடியிருந்து வருபவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி உள்பட அனைத்தும் பாதிக்கும். எனவே, இந்த இடத்தை அப்புறப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது இதற்கு மாற்றாக அருகில் இருக்கும் ஏதேனும் இடத்தை தங்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: