குமாராபாளையம், அக்.30-
குமாராபாளையத்தில் தாலுகா அலுவலகத்தை உடனடியாக கட்டிக் அரசு அலுவலகங்களை செயல்படுத்திட வேண்டும் என சிபிஎம் நகர மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் ஒன்றிய 6 ஆவது மாநாடு ஞாயிறன்று குமாரபாளையத்தில் தோழர் பி.நல்லம்மாள் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் துவக்கவுரை ஆற்றினார். பின்னர், நகர செயலாளார் கே.பாலுசாமி முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.

தீர்மானம்:
முன்னதாக, இம்மாநாட்டில் குமாராபாளையம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு இதுவரை வாடகை கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே தாலுகா அலுவலகத்தை அரசு விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்த வேண்டும். பழுதடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டும். கோட்டைமேடு பைபாசில் உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும். விசைத்தறி உள்ளிட்ட சிறு, குறு தொழில்களை பாதுக்காப்பதற்கு போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செயலாளர்- கமிட்டி தேர்வு
இதைத்தொடர்ந்து மாநாட்டில் நகரக் குழுவின் புதிய செயலாளராக எஸ்.ஆறுமுகம் மற்றும் 9 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாநில குழு உறுப்பினர் என்.சீனிவாசன் நிறைவுரை ஆற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.