ராஞ்சி,

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில் ஒரே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்திற்கு அடுத்துள்ள கைன்டி காடா கிராமத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோருக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் ஜனவரி 1 ஆம் தேதி பிறந்த தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து ஆதார் அட்டை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆதார் பெறும்போது, சரியான பிறந்த தேதியை குறிப்பிடாதவர்களின் பிறந்த தேதியை ஜனவரி, 1 என்று குறிப்பிடுவோம். ஆனால், ஒட்டு மொத்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள தனியார் அமைப்பிடம் விசாரிக்க உள்ளோம். தவறு திருத்தப்பட்டு கிராம மக்களுக்கு புதிய ஆதார் அட்டை வழங்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.