நாகர்கோவில்;
தமிழகம் முழுவதும் கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் தீக்குளித்து உயிரிழந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து குடும்பத்தினரின் மரணத்திற்கு நீதி கேட்டும் நேற்று மீனாட்சிபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எபிலைசியஸ் ஜோயல் தலைமை வகித்தார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரெகுபதி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜெசின், மாவட்டச் செயலாளர் பிரிஸ்கில் ஆகியோர் உரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் என்.ரெஜீஸ்குமார் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார்.
இதில் வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரசல்ராஜ், சந்தோஷ், மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பால ரூபி, பதில்சிங், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கிரிசாந்து மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.