உடுமலை, அக்.26-
மடத்துகுளம் தாலுகாவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை உடனடியாக திறந்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துகுளம் தாலுகாவின் 22 ஆவது மாநாடு கணியூர் பிடல் காஸ்ட்ரோ நினைவரங்கத்தில் (ஸ்ரீ முருகன் திருமண மண்டபம்) புதனன்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ் துவக்க உரையாற்றினார். தாலுகா செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் முன்
வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதிய தாலுகா செயலாளராக ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்
முன்னதாக, இந்த மாநாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துகுளம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துகுளம் தாலுகா முழுவதும் திருமூர்த்தி மலை கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைத்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து புதிய தாலுகாகுழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன் நிறைவுரை ஆற்றினார்.

பொதுக்கூட்டம்: இதைத்தொடர்ந்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி கணியூர் பேருந்து நிலையம் அருகில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, செ.முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், தாலுகா செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.