வேலூர்;
பிரபல இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தருக்கு, வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் 2 தியேட்டர்கள் உள்ளன. டெங்கு நோய் தடுப்பிற்காக பல இடங்களிலும் சோதனை நடத்திவரும் அரசு அதிகாரிகள், புதன்கிழமையன்று வேலூரில் ஆய்வு நடத்தினர்.அப்போது, டி. ராஜேந்தருக்குச் சொந்தமான தியேட்டர்களில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தியேட்டர் உரிமையாளரான டி.ராஜேந்தருக்கு ரூ. 10 ஆயிரம் அபாரதம் விதித்தனர். அத்துடன், தியேட்டரிலிருந்த தொட்டியை உடனடியாக இடிக்கவும் உத்தரவிட்டனர்.

Leave A Reply