வேலூர் சிறை அருகே சிறைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைஅங்காடி திறக்கப்பட்டது. இதில் காய்கறி, மீன்கள் விற்கப்பட்டன. இதன் அருகே நவீன முடி திருத்தகம் மற்றும் திறந்தவெளி உணவகம் திறக்கப்பட்டது. அழகான புல் வெளியுடன் அமைக்கப்பட்ட திறந்த வெளி உணவகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் நிர்வாகக் குளறுபடியால் இவை அனைத்தும் மூடப்பட்டன.  அந்த அங்காடியை மீண்டும் திறக்க சிறை காண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் நடவடிக்கை எடுத்தார்.

கடந்த மாதம் கைதிகளால் நடத்தப்படும் முடிதிருத்தகம் திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலையில் கட்டிங், சேவிங், குழந்தைகளுக்கு பலவித மாடல் கட்டிங் செய்யப்படுகிறது. உணவகம் திறப்பு விழா நடந்தது. சிறை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.இதில் காலை டிபன், மதியம் வெரைட்டி சாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கைதிகளால் நடத்தப்படும் இந்த உணவகத்தில் இட்லி ரூ.5, வடை ரூ.5, பொங்கல் ரூ.10 க்கும், தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ரூ.20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மாலை நேர திறந்தவெளி உணவகம் திறக்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply