தில்லி:
அரியானாவில் அரசு போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்துத்துவா கேள்விகள் கேட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலத்தில் மனோகர் லார் கட்டா தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து அரியானா மாநில அரசு பணிக்கான தேர்வு எழுது மாணவ மாணவிகள் பாபா ராம்தேவ் மற்றும் இவரை போன்றவர்களின் விபரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் போட்டின் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகளின் விபரங்கள் பின்வருமாறு
அரியானாவில் காளி கமளி பாபாவின் தேரா எந்த பகுதியில் உள்ளது?. பாபா ராம்தேவின் குரு பெயர் என்ன?. எந்த நிகழ்ச்சி பசோதா என்று அழைக்கப்படும்?. ஹரியானாவில் எந்த பகுதி கமில் முனியுடன் தொடர்புடையது? என்பன போன்ற கேள்விகள் அரசு உதவியாளர் பணி தேர்வு. போலீஸ் தேர்வு, புள்ளியியல் துறை தேர்வு போன்றவற்றில் கேட்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விகளுக்கு தேர்வு எழுதுவோரும், சமூக ஆர்வலர்களும் இந்த கேள்விகள் கேட்கப்படுவதற்கான அர்த்தம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகள் அனைத்து பயனுள்ள கேள்விகள் என்றும், இந்த கேள்விகள் மக்களுக்கு சேவை செய்ய பயனுள்ளதாக இருக்கும் பாஜக கருதுகிறது.
இது போன்ற கேள்விகள் கேட்பது முதன்முறையல்ல. இதன் மூலம் தேர்வு எழுதுபவரின் அறிவுத் திறனை அறிய முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக வெளியிட்ட 70 பக்கம் கொண்ட ஒரு பொது அறிவு வினா விடை புத்தகத்தை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட்டார்.
அது உ.பி. பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் தேசியவாதம், இந்துத்வா, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள், தீனதயாள் உபத்யாயா போன்ற சங் பரிவாரின் சிந்தனைகள், ஹெட்ஜேவார், சையமா பிரசாத் முகர்ஜி, வீர் சாவர்கர், நானாஜி தேஷ்முக் போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், உத்தரபிரத முதல்வர் யோகி ஆதித்யனாத் கொள்கைகள், ராமஜென்மபூமி போன்றவற்றின் கேள்விகளும் அதில் அடங்கியள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.