கோவை, அக்.20-
கோவை கருமத்தம்பட்டியில் கார் மோதி கணவன், மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள துரைசாமிபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 50). இவரது மனைவி பூபதி (39), மகன் பிரிதிவிராஜ் (22). இவர்கள் கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையத்தில் தங்கி விசைத்தறி வேலைக்கு சென்று வந்தனர். வியாழனன்று இரவு முத்துராஜ் மனைவி, மகனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் கிட்டாம்பாளையம் நால்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் இவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் முவரும் படுகாயம் அடைந்தனர். இதனைதொடர்ந்து 3 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் முத்துராஜ் வழியிலேயே இறந்தார். பூபதி, பிரிதிவிராஜ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பூபதி இறந்தார். பிரிதிவிராஜூக்கு தொடர்நது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: