திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தில் நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பிரபல நடிகர் திலீப், கடந்த ஜூலை 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.பல்சர் சுனில் உள்பட மொத்தம் 8 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், திலீப் 11-ஆவது குற்றவாளியாகவே முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது போலீசார் குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளனர். அதில், நடிகர் திலீப் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: