சேலம், அக்.20-
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் வெள்ளியன்று சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. இந்த போட்டியினை மாவட்ட ஆட்சியர் ரோஹினி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1701 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டு போட்டிகள் பல பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: