சென்னை,

தமிழகத்தில் வீடுகளில் இருப்பதை விட அரசு அலுவலகங்களில் தான் டெங்கு கொசுக்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் பூச்சியியல் வல்லுனர்கள், பொது சுகாதார வல்லுனர்கள், நோய் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் என 10 பேர் இடம் பெற்றனர். இந்த குழுவினர் 1025 வீடுகள், 625 அரசு கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.  மருத்துவமனை, பள்ளிகள், நகராட்சி அலுவலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலக வளாகங்களில் ஒரு வாரம் நடத்திய ஆய்வில் வீடுகளை விட அரசு கட்டிடங்களிலும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும் தான் கொசு உற்பத்தியை உருவாகக் கூடிய தண்ணீர் தேங்கும் பொருட்கள் 27.7 சதவீதம் இருப்பது தெரியவந்துள்ளது. வீடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு 5 சதவீதமாக குறைந்துள்ளது.

 ஆய்வின் முடிவில்  அரசு கட்டிட வளாகங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகளில் இருந்து தான் 60 சதவீத  டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply