திருவனந்தபுரம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  இன்று எவ்வித கொண்டாட்டமும் இல்லாமல் குடும்பத்தினர் இனிப்புகளை பரிமாறி எளிமையாக கொண்டாடினர். வழக்கமாக வி.எஸ். அச்சுதானந்தன் தனது குடும்பத்தினருடனும், அலுவலக ஊழியர்களுடனும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடுவது உண்டு. அவ்வாறே இந்த வருடமும் திருவனந்தபுரத்தில்  அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்திருந்தது. மாலையில் திருவனந்தபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Leave A Reply