குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் அச்சல் குமார் ஜோதி. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஓய்வு பெற்றார். 2014-இல் மோடி பிரதமர் ஆனதும், தேர்தல் ஆணையத்திலுள்ள 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அச்சல் குமார் ஜோதி 2015-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதி ஓய்வுபெற்றதையொட்டி, ஜூலை 6-ஆம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராகவும் அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.

அச்சல் குமார் ஜோதி, தேர்தல் ஆணையத்திற்குள் கொண்டுவரப்பட்டபோதே அவரது நியமனம் விமர்சனத்திற்கு உள்ளானது. ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கும் குஜராத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவதாக மோடி மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply