சென்னை;
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மெர்சல் படம்.‘மெர்சல்’ என்ற பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்று கூறி தொடரப்பட்ட வழக்கு,விலங்குகள் நல வாரியம் தெரிவித்த எதிர்ப்பு என தடை,சென்சார் போர்டு சான்றிதழ் என பல சிக்கல்களுக்கு பின்னர் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே தீபாவளி தினத்தில் வெளியாகியது ‘மெர்சல்’ படம். ‘மெர்சல்’ படத்தில் வடிவேலுவிடம் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முற்படும் காட்சியுள்ளது. அதில் கிழிந்த பர்சை காண்பிக்கும் வடிவேலு, இந்தியாவில் யாரிடமும் பணமேயில்லை. எல்லோரும் கியூவில்தான் நிற்கிறார்கள் என்ற காட்சி பண மதிப்பிழப்பை தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற அரசு முயன்றதை இவ்வாறு படத்தில் கேலி செய்துள்ளனர்.  

கடகளவு சிறிய நாடு உலக வரைபடத்தில் கடகளவு சிறிய நாடு உடைய சிங்கப்பூருடன் இந்தியாவை அதிக ஜிஎஸ்டி வரி வாங்கும் நாடு என ஒப்பிட்டு பேசும் வசனம் சரவெடியாய் சிதறுகிறது .‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளன.

இலவசத்திற்கு ஏற்ப தரமான மருத்துவம் இல்லை என விஜய் பேசுவதை போன்ற காட்சி அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது. ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் வரை மக்களுக்கு பணம் தரும் ஊர் இது, இலவச மருந்து தரமுடியாதா என்ற வசனம் மூலம் மத்திய அரசை கடுமையாக விஜய் விமர்சித்துள்ளார்.

இந்த அரசியல் வசனகள் மூலம் ‘மெர்சல்’ படம் ஓரளவு செல்வாக்கான இடத்தில் நகருகிறது.

Leave A Reply

%d bloggers like this: