சென்னை;
தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கவே கூடாது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியுள்ளார். “தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது; அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் பல தடைகள் ஏற்படும்; இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்” என்று வழக்கமான கூப்பாட்டையே ராஜீவ் குமார் போட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் “முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பும் குறைந்துபோய் விடும்” என்று போலியாக புலம்பியுள்ளார்.

தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாடு முழுவதும் முழக்கங்கள் எழுந்து வருகின்றன. இடதுசாரிகள், சமூகநீதிச் செயற்பாட்டாளர்களால் இக்கோரிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்பதை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டு, அதுதொடர்பாக பேசி வருகின்றனர்.

இந்நிலையிலேயே நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: