சென்னை;
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்தார்.

“சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு கசாய விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும். ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரிய காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என தெரிவித்தார்.கமலின் இந்த திடீர் கருத்தால் தமிழக மக்கள் மற்றும் மருத்துவ துறைகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.கமலின் இந்த கீழ்த்தரமான கருத்தால் பொங்கி எழுந்த தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் தனது அறிக்கையில்,“நீங்கள் கெளரவ டாக்டர் பட்டம் மட்டுமே பெற்றிருக்கிறீர்கள், நிஜ டாக்டர் அல்ல. நிலவேம்பைப் பற்றித் தெரியாமல் கருத்தைப் பதிவிட்ட நீங்களும் போலி மருத்துவர்தான். தடைசெய்யப்பட்ட எத்தனையோ மருந்துகள் இங்கு புழக்கத்தில் இருக்கும்போது அதைக் கண்டுகொள்ளாத நீங்கள், நிலவேம்பை மட்டும் எதிர்ப்பது ஏன்? 

 

தங்கள் அரசியல் ஆசைக்கு, வளர்ச்சிக்காக தயவுசெய்து நிலவேம்பு கசாயம் குடிப்பதை இழுக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு செயலும், கருத்தும் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவே உள்ளது. உங்களுக்குத் தெரியாத விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் நீங்கள், உங்கள் சந்தேகம் தீர ஏதேனும் ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம்.இனிமேலும் இதுபோல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதை விட்டுவிட்டு, உங்கள் நடிப்புத் தொழிலை மட்டும் பாருங்கள். தேவையில்லாமல் மருந்துகள் பற்றிப் பேசி போலி மருத்துவத் தொழில் செய்ய வேண்டாம்” கமல் ஹாசனை கடுமையாக எச்சரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: