புதுதில்லி;
தில்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தின் தென் பகுதியிலுள்ள 242-ஆம் எண் அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, நான்கு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடங்களில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த காயமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், அறையில் இருந்த சில பொருட்களுக்கு மட்டுமே சேதம் அடைந்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply