புதுதில்லி,
பிரதமர் அலுவலகத்தின் 2வது தளத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லி இரைசினாக் குன்றில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாக்கப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் 2வது தளத்தில் உள்ள 242வது அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர்  7 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீஅணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். சுமார்  20 நிமிடத்திற்குள் தீயை கட்டுப்படுத்தப்பட்டது.  இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கணினியின் UPSல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: