திருப்பூர், அக்.17-
திருப்பூர் செரங்காடு பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் காலதாமதம் செய்வதைக் கண்டித்து மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி செரங்காடு 41- வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் செரங்காடு கிளைச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் தலைமையில் மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எனினும் மூன்றாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது அங்கு வந்த உதவிப் பொறியாளர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து இப்போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், கிளைச் செயலாளர் துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: