திருவள்ளூர்,

திருக்கோவிலூர் அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.
திருக்கோவிலூர் அருகே பல்லவாடி என்ற இடத்தில் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தம்பதி சரவணன், பானுமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த பானுமதி எடையார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply