கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள நக்கல்பட்டியில் மோகன் என்பவருக்கு சொந்தமான கிரானைட் ஆலை உள்ளது. இன்று கிரானைட் ஆலையில் இருந்து கற்களை ஏற்றி சென்ற லாரி, ஊருக்குள் உள்ள சாலையில் செல்லும் போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. அப்போது அங்கிருந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த ராஜா என்பவரின் மகன் ஹரிஷ்(12) மற்றும் முருகேசன் என்பவரின் மகன் கவியரசன்(6) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் அமர்ந்திருந்த சந்திரா (50) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: