நாமக்கல், அக்.16-
எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மானத்தி ஊராட்சியில் பூட்டப்பட்டுள்ள அரசு நூலகத்தை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மானத்தி ஊராட்சி. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே அரசு நூலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே நூலகம் திறக்கப்படாமல் பூட்டு போடப்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். மேலும், நூலகர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது வருவதாக, அவர் வந்தாலும் சில மணி நேரம் மட்டுமே இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது:- மானத்தி ஊராட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், அரசு தேர்வுக்கு படிக்க கூடியவர்களும் இங்கு இருக்கும் நூலகத்தில் படித்து வந்தனர். ஆனால், நூலகம் சில மாதங்களாக சரியாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து நூலகத்தை மீண்டும் முறையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: