நாகர்கோவில்;
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் செங்கல் சூளை, கட்டிட வேலைகள், கடைகள் என பல்வேறு தொழில்களில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

தோவாளையில் உள்ள செங்கல் சூளையில் கொல்கத்தாவைச் சேர்ந்த மெகாபகாடியா, மற்றும் இவரது மனைவி அமாதிர் பகாடியா (34) ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் பணிபுரியும் செங்கல் சூளை அருகிலேயே கூரை அமைத்து தங்கி வருகின்றனர்.

வழக்கம் போல் ஞாயிறு மாலை பணி முடிந்ததும் கணவன், மனைவி இருவரும் இரவில் உணவருந்திவிட்டு தூங்க சென்றனர். பின்னர், அதிகாலையில் மெகாபகாடியா வெளியில் சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.

அப்போது தூக்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பியபோது, அவர் அசைவற்று கிடந்துள்ளார். அதிர்ச்சியில் மெகாபகாடியா கூச்சலிட, அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அமாதிர் பகாடியா உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த ஆரல்வாய் மொழி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த வட மாநில பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து வட மாநில பெண்ணின் கணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply