உடுமலை, அக்16-
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் எழுச்சியுடன் நடைபெற்றது.  இம்மாநாடுகளில் புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் விவரம் வருமாறு, இராமசந்திரபுரம் கிளையின் செயலாளராக எம். விஜயகுமார், கொங்கல் நகரம் – எஸ். கண்ணப்பன், வரதராஜபுரம் – எம்.மணி, பொன்னேரி – வி. நாச்சிமுத்து, கோட்டமங்கலம் – பி. குழந்தைவேல், முருங்கபட்டி – எம். அய்யனார் (எ) கருப்புசாமி, குமாரபாளையம் – கே. ஆறுச்சாமி, சிக்கனூத்து – எம். கோவிந்தராஜ் ஆகியோர் புதிய செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல், குடிமங்கலம் கிளை செயலாளராக கிட்டுசாமி, வி. வல்லகுண்டாபுரம் – ஜி. திருமலைசாமி, விருகல்பட்டி – கே. வேலாயுதம், சலவநாயக்கன்பட்டி – ஆர்.பழனிசாமி, முங்கில் தொழுவு – பி. மோகன் ராஜ், பெதப்பம்பட்டி – ஜி.தங்கவேல், புக்குளம் – கே. மகேந்திரன், கள்ளபாளையம் – எஸ்.கருப்புசாமி, முத்துசமுத்திரம் – பி.பட்டான், சனுபட்டி – எல்.கனகராஜ், எஸ். வல்லகுண்டாபுரம் – பி. மாரிமுத்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், வடுகபாளையம் – எ.மயில்சாமி, எல்.என். புதூர் – ஆர்.நாச்சிமுத்து, ஆலாமரத்தூர் – எம். முத்துசாமி, அம்மாபட்டி – எம்.லட்சுமி, வாகைத்தொழுவு – எம்.காளிமுத்து, பொதவை (மாதர் கிளை) – ஆர்.கலைவாணி ஆகியோர் புதிய கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, இந்த கிளை மாநாடுகளில் ஒன்றிய செயலாளர் வெ. ரங்கநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சசிகலா, தங்கவடிவேலன், ஓம்பிரகாஷ், சுந்தர்ராஜ், விஜயகுமார், லட்சுமணசாமி, மோகனசுந்தரம், தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: