பரிதாபாத், அக்.15-
ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத்தில் மாட்டிறைச்சியை கடத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மாற்றுத்திறனாளி ஒருவரை உயிருடன் எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது வட மாநிலங்களில் தொடர்ச்சியாக பசுவதை கண்காணிப்பாளர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி பயன்படுத்துவோருக்கு எதிரான தாக்குதல் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரிதாபாத்தில் மாற்றுத்திறனாளியான இஸ்லாமிய வாலிபர் ஆசாத் என்பவர்வாடகைக்கு ரிக் ஷா ஓட்டி வாழ்ந்து வருகிறார்.

அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவரிடம் ஆசாத் வாடகைக்கு ரிக் ஷா ஓட்டுவது வழக்கம். சனியன்று இவர் தனது வாடிக்கைப்படி ரிக் ஷா ஓட்டிச் சென்ற போது 2 பேர் வழிமறித்துள்ளனர். நீ மாட்டிறைச்சி கடத்துகிறாயா என்று கேட்டு அவரிடம் தகராறு செய்துள்ளனர். அதற்கு காவல் நிலையம் சென்று சோதனையிடலாம் வாருங்கள் என்று ஆசாத் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள் இருவரும் தங்கள் செல்போனில் பேசி மேலும் சிலரை வரவழைத்து, ஆசாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்து கீழேவிழுந்த ஆசாத் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க அவர்கள் முயன்றுள்ளனர்.

ஆனால் தீக்குச்சியை அவர்கள் உரசிய போது ரோந்து போலீஸ்காரர் ஒருவர் அந்த பக்கமாக வந்துள்ளார். அவரைக் கண்டவுடன் தாக்கியவர்கள் தப்பித்து ஓடிவிடவே, ஆசாத் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆசாத் தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடிவருகின்றனர். இராஜஸ்தான் ஹரியானாவைத் தொடர்ந்து இராஜஸ்தானில் நடந்துள்ள பசுக்குண்டர்களின் அராஜகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் மாடுகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளது. அவரது மாட்டுப் பண்ணையில் இருந்த 51 மாடுகளை பசுக்குண்டர்கள் அராஜகமாக கைப்பற்றி ஓட்டிச் சென்றுவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.