சண்டிகர்: மாட்டிறைச்சி கடத்தியாக கூறி 4 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பசு குண்டர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்களை குறி வைத்து  தாக்குதல் நடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற பசு குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் பசு குண்டர்களின் தாக்குதல் அங்கங்கே நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.

 அரியானா மாநிலம் பரிதாபாத்தில் 13-ம் தேதி இறைச்சி கடையிலிருந்து இறைச்சியை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் ஆசாத் மற்றும் அவருடைய நண்பர்களை பசு குண்டர்கள் வழிமறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின்னர் அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட பசு குண்டர்கள் ஆசாத் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதற்கிடையே அங்கு வந்த காவல்துறையினரை பார்த்ததும் பசு குண்டர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து காயம் அடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் பசு குண்டர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: