மொகதிஷூ,

சோமாலியாவில் உள்ள ஒரு உணவு விடுதியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 85 பேர் பலியாகினர்.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிஷூ அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதியை குறிவைத்து சனியன்று தீவிரவாதிகள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்றை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 85 பேர் பலியாகினர்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுமார் 60 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொகதிஷூ நகரில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் என்ற வகையில் இந்த சம்பவத்துக்கு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்குமாறு உத்தரவிட்ட சோமாலியா அதிபர் முஹமது அப்துல்லாஹி முஹமது சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்ததானம் அளிக்க முன்வருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.