புதுதில்லி,

மத்திய அரசின் ஒரே பாரதம் (http://ekbharat.gov.in/) என்ற இணையதளத்தில் தமிழ் மொழிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில் இந்தியாவின் கலாசாரக் கூறுகள் குறித்தும் மொழிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையத்தின் முகம் முகப்பு பக்கத்தில் ஐந்து படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் படங்களில், இந்திய கலாசாரங்கள், விளையாட்டுகள் என விளக்கப் படங்கள் உள்ளன. அதில், “ஏக் பாரத் ஷ்ரெஸ்தா பாரத்” (ek bhart shreshtha bharat) என்று ஆங்கிலம் உள்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழிக்கு இடம் அளிக்கப்படவில்லை. தமிழ் மொழியில் அந்த வாசகம் குறிப்பிடப்படவில்லை.
ஏற்கனவே திட்டமிட்டு கீழடி ஆய்வை முடித்து வைத்து தமிழர்களின் தொன்மை வெளிக்கொண்டு வர மத்திய அரசு மறுகிறது என்று சிபிஎம் உட்பட பல கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ஒரு இணையத்தில் தமிழ் மொழி விடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply