ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரில் மாநிலம் நயா ராய்பூர் மாவட்டத்தில் உள்ள துணி சந்தையில் உள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 3 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.