தூத்துக்குடி;
பொது மக்கள் எந்த காய்ச்சல் இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும், சுய வைத்தியம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், போலி மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆயத்தப்பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை, அரசு முதன்மை செயலாளர், குமார்.ஜெயந்த்,மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை, அரசு முதன்மை செயலாளர், குமார் ஜெயந்த், தெரிவித்ததாவது:                                                                                                                                                                   தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் பருவ மழைக்காலங்களின் போது ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.ஸ். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கும் வாரம் தோறும், ஒவ்வொரு வியாழக்கிழமையும், டெங்கு தடுப்பு தினம் என அனுசரித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொது மக்கள் எந்த காய்ச்சல் இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும், சுய வைத்தியம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், போலி மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.