மின்வாரியத்தில் காலியாக உள்ள 42 ஆயிரம் பணியிங்களை நிரப்ப வலியுறுத்தி மின்ஊழியர்கள் வெள்ளியன்று (அக்.13)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள வாரிய தலைமை அலுவலகம் முன்பு  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை காலம்கடத்தாமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும், 10ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 1.12.2015 முதல் ஊதிய உயர்வு ஒப்பந்த நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப்பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர், மாநிலச் செயலாளர்கள் தயாளன், தனலட்சுமி, மண்டலச் செயலாளர்கள் ஏ.பழனி (சென்னை தெற்கு), ரவிக்குமார் (சென்னை வடக்கு),. பழனிவேல் (விழுப்புரம்) உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply