108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஜி.வி.கே – ஈ.எம்.ஆர்.ஐ. கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான அறிவிப்பு  இதுவரை வெளியிடப்படாத  காரணத்தால் வரும் 17ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தீபாவளி நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது 108 ஆம்புலன்ஸ் சேவை அவசியம் என்பதால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடைவிதிக்க வேண்டும் என்று  பேட்ரிக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு வெள்ளியன்று (அக். 13) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும், ஜி.வி.கே- ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Leave A Reply